ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஹைதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, 6ல் வெற்றி, 5ல் தோல்வியடைந்துள்ளன. இரு அணிகளும் 12 புள்ளிகளுடன் உள்ளன. இன்று வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும்.