கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று பங்குச்சந்தைகள் மோசமான சரிவை கண்டுள்ளன. பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் ஏற்பட்ட பலவீனம், வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட பெரும் சரிவால் பங்குச்சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1.6 சதவீதமும் நிஃப்டி 1.37 சதவீதமும் சரிந்துள்ளது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 1,235.08 புள்ளிகள் சரிந்து 75,838.36 ஆகவும், நிஃப்டி 320.10 புள்ளிகள் சரிந்து 23,024.65 ஆகவும் நிறைவு பெற்றுள்ளது.