மதுபோதையில் 13 வயது சிறுமியிடம் விடுதி காவலாளி அத்துமீறிய பயங்கரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சென்னை தாம்பரத்தில் செயல்படும் அரசு சேவை இல்லத்தில் சிறுமி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விடுதியின் காவலாளி மேத்யூ கைது செய்யப்பட்டார். இவர் தனது தாயின் வேலையை கருணை அடிப்படையில் பெற்றவர் ஆவார். கடந்த 15 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வந்தவர், சம்பவத்தன்று மதுபோதையில் கொடூர செயலை அரங்கேற்றி இருக்கிறார்.