உலகளவில் பல கோடி ரசிகர்களை கொண்டிருக்கும் நோலனின் "இண்டர்ஸ்டெல்லார்" திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியாவில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. 2014ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் 10ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது படக்குழு உலகம் முழுக்க ரீ-ரிலீஸ் செய்தது. ஆனால் இந்தியாவில் புஷ்பா 2 படத்தின் தாக்கத்தால் இப்படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.