இணைய சேவை பாதிப்பு : மெட்ரோ டிக்கெட் சிக்கல்

349பார்த்தது
இணைய சேவை பாதிப்பு : மெட்ரோ டிக்கெட் சிக்கல்
சென்னை முழுவதும் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலமாக மெட்ரோ டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தாக்குதலுக்கு பிறகு சென்னையில் பல இடங்களில் மின் சேவை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இணைய சேவையும் தடைப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. மேலும்,

சிங்கார சென்னை அட்டைகளும் தற்போது செயல்படாத காரணத்தினால், ரயில் நிலையங்களிலேயே பயணிகளுக்கு பிளாஸ்டிக் டோக்கன் டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you