சர்வதேச தடகளப் போட்டி: தங்கம் வென்ற வித்யா ராம்ராஜ்

55பார்த்தது
சர்வதேச தடகளப் போட்டி: தங்கம் வென்ற வித்யா ராம்ராஜ்
தை​வான் ஓபன் சர்​வ​தேச தடகளப் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை வித்யா ராம்​ராஜ் 400 மீட்​டர் தடை ஓட்​டத்​தில் தங்​கம் வென்​றார். மகளிர் 400 மீட்​டர் தடை ஓட்​டத்​தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீராங்​கனை வித்யா ராம்​ராஜ் 56.53 விநாடிகளில் ஓடி வந்து முதலிடம் பிடித்து தங்​கம் வென்​றார். இதற்கு முன்பு நடை​பெற்ற பெடரேஷன் கோப்பை போட்​டி​யில் இதே பிரி​வில் 56.04 விநாடிகளி​லும், ஆசிய சாம்​பியன்​ஷிப் இறு​திப் போட்​டி​யில் 56.46 விநாடிகளி​லும் பந்தய தூரத்​தைக் கடந்தார்.

தொடர்புடைய செய்தி