மதுரை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று (ஜூன் 8) தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோரிடம் தனித்தனியாக உட்கட்சிப் பூசல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியினர் ஓரணியில் செயல்பட தயாராக இருக்க வேண்டும் என்பதால் உட்கட்சிப் பூசலை முடிவுக்கு கொண்டுவர அமித் ஷா செயல்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.