பிரபல மலையாள இயக்குநர் ஷாபி தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உள் இரத்தப்போக்கு பிரச்சனை காரணமாக தீவிர சிகிச்சைப்பிரிவில் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஜன.,16 அன்று அனுமதிக்கப்பட்ட ஷாபிக்கு, தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர், மம்முட்டி, ஜெயராம், திலீப், பிரித்விராஜ் உள்ளிட்ட பலரது படங்களை இயக்கியுள்ளார். தமிழில் விக்ரமின் 'மஜா' படத்தை மட்டும் இயக்கியுள்ளார்.