இன்டெல் நிறுவனம், ஜூலை மாதத்தில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வார்ப்பாலை பணியாளர்களில் 15 - 20% பேர் வரை பாதிக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து இன்டெல் உற்பத்தி துணைத் தலைவர் நாக சந்திரசேகரன் கூறுகையில், “இது கடினமான நடவடிக்கை. ஆனால், எங்கள் நிறுவனத்தின் தற்போதைய நிதி நிலைமையை சரி செய்ய இந்த முடிவு அவசியமானது” என தெரிவித்துள்ளார். இந்த ஆட்குறைப்பு, உலகளவி 10 இடங்களில் உள்ள பணியாளர்களை பாதிக்கும் எனப்படுகிறது.