தமிழகத்தில் ஆண்டுதோறும் 9.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுவதாகவும், அதில் சுமார் 50,000 குழந்தைகள் எடை குறைவாகப் பிறப்பதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (TMCH) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்காக சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை மாநில அரசு விரைவில் செயல்படுத்தும் என தெரிவித்துள்ளார்.