ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது திருமணமான இளம்பெண், தனது கணவரிடம் விவாகரத்து பெற்றுவிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கியுள்ளார். அவருக்கும் ராகுல் (21) என்ற இளைஞருக்கும் இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறிய நிலையில் பலமுறை இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதில், அப்பெண் கர்ப்பாகியுள்ளார். அதனை கலைத்த நிலையில், பெண்ணிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். தொடர்ந்து பெண் அளித்த புகாரின் பேரி ராகுல் கைது செய்யப்பட்டார்.