சென்னை: விருகம்பாக்கத்தில் புகாரளிக்க வந்த 25 வயது இளம்பெண்ணை இன்ஸ்பெக்டர் கண்ணன் காதல் வலையில் விழ வைத்துள்ளார். இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து ஒன்றாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கண்ணனின் மனைவிக்கு தெரிய வந்ததையடுத்து, தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என அப்பெண்ணிடம் கூறிவிட்டு தொடர்பை முறித்துள்ளார். இதையடுத்து, அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.