18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் குறித்து தகவல்

67பார்த்தது
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் குறித்து தகவல்
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் மோடி நாளை (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகு 18-வது மக்களவையின் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் எம்.பி. சபாநாயகராக தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 15 தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்போது புதிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். இந்த நிகழ்வு சில நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி