இண்டிகோ (IndiGo) உலகின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமாகும். அமெரிக்காவின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனம் 30.4 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 2.52 லட்சம் கோடி) சந்தை மதிப்புடன் உலகின் முன்னணி விமான நிறுவனமாக உள்ளது. இந்திய நிறுவனமான IndiGo 17.6 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 1.46 லட்சம் கோடி) சந்தை மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த விமான நிறுவனம் இந்தியாவின் ஹரியான மாநிலத்தில் உள்ள குர்கானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் குறைந்த கட்டண விமானச் சேவைகளில் இதுவும் ஒன்று.