இந்திய ராணுவ வீரர் மரணம்.. கண்ணீரில் மூழ்கிய கிராமம்

58பார்த்தது
பாகிஸ்தான் ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் ராம்பாபு சிங் வீர மரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான சிவான் கிராமத்திற்கு இன்று (மே.14) கொண்டு செல்லப்பட்டது. ராம்பாபு உடல் இருந்த வாகனத்தை சூழ்ந்துகொண்ட கிராம மக்கள், கண்ணீருடன் அவருக்கு விடை கொடுத்தனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் கதறி அழுதனர்.
ராம்பாபுவின் உடலுக்கு அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி