இந்திய அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசன் (95) ஊட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (மே. 20) அதிகாலை காலமானார். கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீனிவாசன் அணுசக்தி ஆராய்ச்சியின் உச்சத்தை எட்டியதோடு இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவராகவும் சில காலம் பதவி வகித்திருக்கிறார். பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் போன்ற நாட்டின் உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரரான அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.