சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கி தொடரில், 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஜூனியர் அணி, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் தலா 3 கோல் அடித்ததால் போட்டி டிரா ஆனது. பின்னர் பெனால்டி ஷூட் அவுட்டில், இந்திய அணியின் கோல் கீப்பர் மோஹித் அற்புதமாக ஒரு கோலை தடுத்தார். இதனால் 6-5 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றது.