2024 பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி ஏமாற்றம் அளித்துள்ளது. லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியத்திடம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இருப்பினும், காலிறுதி வாய்ப்பில் இந்திய அணி தொடர்ந்து நீடிக்கிறது. நாளை (ஆகஸ்ட் 2) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி நேரடியாக கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும்.