ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரங்களைத் தொட்டவர் என்கிற சாதனையை மும்பையைச் சேர்ந்த 17 வயதான இளம் பெண் படைத்துள்ளார். மும்பையைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயன், 12-ம் வகுப்பு படித்து வருகிறார். தனது 13 வயதில் இந்த பயணத்தை தொடங்கிய காம்யா கிளிமாஞ்சாரோ, எல்பிரஸ், எவரெஸ்ட், ஆஸ்திரேலியாவின் கொஸ்கியுஸ்கோ அமெரிக்காவின் அகோன்காகுவா மலைகளை ஏறி இருக்கிறார். தற்போது அண்டார்டிகாவின் வின்சன் மலையில் ஏறி இவர் சாதனை படைத்துள்ளார்.