இஸ்ரேல் செல்லும் இந்திய விமானங்கள் ரத்து

148பார்த்தது
இஸ்ரேல் செல்லும் இந்திய விமானங்கள் ரத்து
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலுக்கான விமானங்களை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது. சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதை அடுத்து டெல் அவிவ் செல்லும் விமானங்களை ஏர் இந்தியா ரத்து செய்தது. பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, டெல்லி-டெல் அவிவ் (A1139) மற்றும் டெல் அவிவ்-டெல்லி திரும்பும் விமானம் A1140 ஆகியவற்றை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி