இந்திய ராணுவத்திற்கும், ஆயுத விஞ்ஞானிகளுக்கும் சல்யூட் அடிக்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆபரேஷன் சித்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, "பஹல்காம் தாக்குதல் மிகுந்த மன வலியை ஏற்படுத்தியது. இந்தியாவின் பதிலடி முற்றிலும் நியாயமானது. ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல, மக்களின் உணர்வு, மக்களின் வைராக்கியம்" என்று கூறியுள்ளார்.