இந்தியா - பாகிஸ்தான் இடையில் அடுத்த 4 நாட்களில் போர் தொடங்கலாம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா பாகிஸ்தானை அழிக்க விரும்புகிறது. இந்தியா தாக்கினால், பாகிஸ்தான் இராணுவம் தகுந்த பதிலடி கொடுக்கும். தேவைப்பட்டால் பாகிஸ்தான் இந்தியாவின் மீது அணுகுண்டுகளை வீசும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.