இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் நடத்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையேயான அரசியல் அனைவரும் நீண்ட காலமாக அறியப்பட்டவை. ஆனால், இத்தொடரை எல்லோரும் இதனை விரும்புவார்கள். " என்று கூறியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி 17 ஆண்டுகளுக்கு முன்பு 2007ல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.