இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை அடுத்த 5 ஆண்டுகளில் உலகில் முதலிடத்தை எட்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்புகளின் தேவை உலகளவில் மிக அதிகமாக உள்ளது. இந்த துறையின் அளவு இப்போது ரூ.22 லட்சம் கோடியாக உள்ளது. மேலும் ஐந்து ஆண்டுகளுக்குள் உலகில் முதலிடத்தை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது, அமெரிக்க ஆட்டோமொபைல் துறையின் அளவு ரூ.78 லட்சம் கோடியாக உள்ளது.