இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 427 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்துள்ளது. 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 427 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் 161, ஜடேஜா 69 மற்றும் பண்ட 65 ரன்கள் விளாசினர். இதைத்தொடர்ந்து, 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.