மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்தை 248 ரன்களுக்குள் சுருட்டிய இந்தியா, 38.4 ஓவரில் இலக்கை எட்டியது. 2ஆவது ஒருநாள் போட்டி ஞாயிறன்று கட்டாக்கில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் இந்தியா உள்ளது. சொந்த மண்ணில் விளையாடிய கடைசி 10 போட்டிகளில் இந்தியா தற்போது 9 முறை இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.