இந்தியா - பாகிஸ்தான் போரின் மத்தியில் தலையிடுவது அமெரிக்காவின் வேலை இல்லை என அமெரிக்க துணை அதிபர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஜே.டி. வான்ஸ், "போருக்கு மத்தியில் அவர்களை ஆயுதங்களை கீழே போடுங்கள் என சொல்ல முடியாது. ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு விஷயத்தில் அமெரிக்கா உதவும். இந்த போர் அணு ஆயுத போராக மாற வாய்ப்பில்லை. போர் பிராந்திய போராக மாறிவிடக்கூடாது என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு" என பேசினார்.