இந்தியாவில் பெரும்பாலான குழந்தை பேறுகளில் சராசரியாக 21.5% சிசேரியன் மூலம் நடப்பதாக தெரியவந்துள்ளது. 2030-ம் ஆண்டு அதிக சிசேரியன் நடக்கும் நாடாக இந்தியா மாறும் என கூறப்படுகிறது. இந்தியாவில் 60.7% சிசேரியன் தெலங்கானாவில் நடப்பதாகவும், அதற்கு அடுத்த இடத்தில் 44.9% சிசேரியன் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஆந்திரா 42.4 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், கேரளா 38.9 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளன.