சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் முடிந்தவுடனே மீண்டும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 36 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.