பீகாரின் சீதாமர்ஹியில் தனது நண்பனின் தாயுடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறி 22 வயது இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்த ராஜா குமார், தனது நண்பனின் தாயான ரீனா தேவியுடன் கடந்த 5 ஆண்டுகளாக தகாத உறவு வைத்திருந்துள்ளார். அடிக்கடி நண்பன் வீட்டிற்கு செல்லும் ராஜாவுக்கு, ரீனா தேவியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ரீனா மற்றும் ராஜா ஒன்றாக இருந்ததை அவரது கணவர் ஜெகதீஷ் பார்த்துள்ளார். அப்போது அவரும், ஊராரும் சேர்ந்து தாக்கியதில் ராஜா உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.