புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.8,000ஆக உயர்த்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், மழைக்கால நிவாரணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படும். காரைக்காலில் உள்ள தலைமை பொது மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டப்படும். காரைக்காலில் பழைமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும். பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.