கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்!

77பார்த்தது
கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்!
கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள் உள்பட 73 காவலர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார். மேலும், 34 காவலர்கள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி