Paytm Payments வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை மார்ச் 15, 2024க்குப் பிறகும் கணக்கு காலியாகும் வரை பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், பேமெண்ட்ஸ் வங்கி வழங்கும் டெபிட் கார்டு மூலம் பணத்தை எடுக்கலாம். மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது வட்டி, கேஷ்பேக், ஸ்வீப்-இன் மற்றும் பார்ட்னர் வங்கிகளில் இருந்து பணம் திரும்பப் பெறுதல் மட்டுமே அனுமதிக்கப்படும்.