தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் அத்யாவசிய உணவுப் பொருட்களை தீபாவளி தொகுப்பாக வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில், வருகிற அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தீபாவளி தொகுப்பாக மைதா, ரவை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம்.