மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில், விரைவில் முக்கிய திருத்தங்களை கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்களின் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட பிற விவரங்களை அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது. இ-செல்லான் செயல்முறையை சீர்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், சரியாக அப்டேட் செய்யப்படாததால் ரூ.12,000 கோடி அபராத தொகையை வசூலிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.