ரேஷன் கடைகளில் விற்பனையாகாத, பொங்கல் மளிகை தொகுப்பில் உள்ள பொருட்களை தனித்தனியே கார்டுதாரர்களிடம் விற்குமாறும், அதற்குரிய பணத்தை முன்கூட்டியே செலுத்துமாறும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்திருப்பது, ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலிவு விலையில் விற்கப்பட்ட பொங்கல் தொகுப்பை வாங்க பலரும் ஆர்வம் காட்டாத நிலையில் அதை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.