கொட்டைப்பாக்கு இறக்குமதி: திமுக கவுன்சிலர் கைது

73பார்த்தது
கொட்டைப்பாக்கு இறக்குமதி: திமுக கவுன்சிலர் கைது
இந்தோனேசியாவில் இருந்து வரி ஏய்ப்பு செய்து ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள கொட்டைப்பாக்கு இறக்குமதி செய்த வழக்கில், தூத்துக்குடி மாநகராட்சி திமுக கவுன்சிலர் சீனிவாசன் கைதாகியுள்ளார். 100 சதவீத சுங்க வரி செலுத்தினால் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து கொட்டைப்பாக்கை இறக்குமதி செய்ய இயலும். ஆனால் கோவையைச் சேர்ந்த நிறுவனம், முந்திரிக்கொட்டை இறக்குமதி செய்வதாக கூறி போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. நிறுவன ஊழியர்கள் உள்பட 4 பேர் மற்றும் உடந்தையாக இருந்ததாக  கவுன்சிலரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி