பண்டிகையின்போது நான் பஞ்சகவ்யம் உண்பது வழக்கம் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காமகோடி, "கோமியத்தை குடித்தால் உடல்நலப் பாதிப்பு ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி குறித்து நான் படிக்கவில்லை. பஞ்சகவ்யத்தில் மருத்துவக் குணங்கள் உள்ளன. என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. கோமியம் தொடர்பாக சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்" என்று பேட்டியளித்துள்ளார்.