ஐஐடி இயக்குநர் ஆளுநர் போல மாறிவிட்டார் - அமைச்சர் பொன்முடி

72பார்த்தது
ஐஐடி இயக்குநர் ஆளுநர் போல மாறிவிட்டார் - அமைச்சர் பொன்முடி
ஐஐடி இயக்குநர் ஆளுநர் போல மாறிவிட்டார் என தெரிகிறது என அமைச்சர் பொன்முடி, கோமியம் குறித்த காமகோடியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, "ஐஐடி இயக்குநர் இவ்வாறு பேசுவது உண்மையில் வருந்தத்தக்கது. மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழக மக்கள், அறிவியல் ரீதியாக சிந்திக்க கூடியவர்கள், பகுத்தறிவு மிகுந்தவர்கள். ஐஐடி இயக்குநர் கூறி விட்டார் என்பதற்காக அதை ஏற்று கொள்ளமாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி