காஞ்சிபுரம் அருகே உள்ள அரசு தொடக்க பள்ளியில் உடும்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 அடி அளவிலான உடும்பு ஒன்று பள்ளியில் புகுந்துள்ளது. இதையறிந்து அங்கு வந்த வனத்துறையினர் அதை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, தீடிரென அந்த உடும்பு அருகில் இருந்த வகுப்பறைக்குள் புகுந்தது. இதனால் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் அலறியடித்து கூச்சலிட்டனர். இதையடுத்து, தப்பியோட முயன்ற அந்த உடும்பை வனத்துறையினர் மீட்டனர். இதுகுறித்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது.