பர்பிள்ஹார்ட் எனப்படும் வயலட் மரம், நீர் சுத்திகரிப்பிற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு வகை மரமாகும். இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வெப்பமண்டல காடுகளில் வளர்கிறது. இதன் சிறிய துண்டை தண்ணீர் தொட்டியில் போட்டால் போதும், தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்களையும் பூஞ்சைகளையும் அழித்துவிடும். மேலும் தண்ணீர் தொட்டியில் பூச்சிகள், பாசிகள் சேராமலும் தடுக்கும். இந்தத் துண்டைப் போட்டுவிட்டால் அடிக்கடி தொட்டியை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.