நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. விழுப்புரம் நகரத் தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சம் நிர்ணயம் என வாட்ஸ்அப் சாட்ஸ்கள் இணையத்தில் உலா வருகிறது. புஸ்ஸி ஆனந்திடம் புகார் அளிக்கும்படி நிர்வாகி பதிவிட்டது போன்றும் வாட்ஸ்அப் சாட்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட அந்த வாட்ஸ்அப் சாட்டில் புஸ்ஸி ஆனந்தன் மொபைல் நம்பரும் உள்ளது. இது தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.