மகாராஷ்டிரா: இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் பேசிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிராவில் ஒருவர் வேண்டுமென்றே மராத்தி பேசாவிட்டால் அவரின் காதுகளுக்குக் கீழே அடியுங்கள். நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள். நீங்கள் அடித்ததை வெளியில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும்" என்றார்.