தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் சென்னை எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் காலியாக உள்ள மேளக்குழு, அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்து மதத்தை சேர்ந்த தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், திருக்கோயில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/ என்ற முகவரியில் விண்ணப்பப் படிவத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.