"திருமாவளவன் வந்தால் வரவேற்போம்" - ஜெயக்குமார்

576பார்த்தது
"திருமாவளவன் வந்தால் வரவேற்போம்" - ஜெயக்குமார்
அதிமுக கூட்டணிக்கு விசிக தலைவர் திருமாவளவன் வந்தால் வரவேற்போம், வராவிட்டாலும் கவலையில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி, பாஜக வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது. தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என இதன்மூலம் தெரிகிறது என விமர்சனம் செய்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி