“RCB கப் அடிச்சா DK தொல்லை தாங்க முடியாது”

67பார்த்தது
“RCB கப் அடிச்சா DK தொல்லை தாங்க முடியாது”
2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாட உள்ளது. இதுகுறித்து நடந்த விவாதத்தில் முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் நாசிர் உசேன், மைக்கேல் ஆத்தெர்டன் ஆகியோர் பேசினர். அப்போது, “இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றுவிட்டால், அதன் ஆலோசகர் தினேஷ் கார்த்திக்கின் தொல்லை தாங்க முடியாது” என நாசிர் உசேன் கூறினார். அதற்கு மைக்கேல் ஆத்தெர்டன், "இரண்டு மடங்கு அவரது தொல்லை இருக்கும்" என கலகலப்பாக பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி