கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த நிலையில், ‛‛மது குடிக்க வேண்டாம் என்று சொல்வதை விட அளவோடு மது குடிக்க அறிவுரை வழங்க வேண்டும்'' என மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தார். இன்று (ஜூலை 6) அவர் அளித்த பேட்டியில், “கள்ளச்சாராயம் வருவதற்கான காரணமே மதுவிலக்கு தான். மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தால் கள்ளச்சாராயம் அதிகமாகும். அது உடலுக்கு கெடுதல் என அனைவருமே மனதில் முடிவு செய்ய வேண்டும்.” என்றார்.