இடுப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது இன்றியமையாதது என்றும் ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை இன்று முதல் உயர்த்தப்படுகிறது. 65 எம்.எல். சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆக. 125 எம்.எல். பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக . 100 எம்.எல். கிளாசிக் கோன் வெண்ணிலா ரூ.30ல் இருந்து ரூ.35-க்கும், 100 எம்.எல். கிளாசிக் கோன் சாக்லேட் விலை ரூ.30-ல் இருந்து ரூ.35-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.