ஐசிசி-யின் உயரிய Hall Of Fame விருது பெற்ற கிரிக்கெட்டர் எம்.எஸ். தோனி, தனக்கு விருது வழங்கப்பட்டது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "பல தலைமுறை கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பில் என்னையும் சேர்த்துக்கொண்டதை பெருமையானதாக நினைக்கிறேன். தலைசிறந்த வீரர்களின் பெயரில் எனது பெயரும் இருப்பது அற்புதமான உணர்வை தருகிறது. இதனை வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழ்வேன்" என பெருமிதம் தெரிவித்துள்ளார்.