Hall Of Fame விருது பெற்ற MS தோனிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரின் X பதிவில், "ஒருநாள் போட்டியில் அதிக ஸ்டம்பிங்ஸ் செய்த வீரர், IPL போட்டியில் CSK-வின் 5 வெற்றிக் கோப்பைகளுக்கு காரணமானவர், ஐசிசியின் Hall of Fame விருது பெற்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. தலைமைப்பண்பு, அமைதி, விக்கெட் கீப்பிங்கை கலையாக மாற்றி எதிர்கால தலைமுறையை ஊக்கப்படுத்தி இருக்கிறீர்கள். உங்களின் கிரிக்கெட் பயணம் எப்போதும் வரலாற்றில் நினைவுகூரப்படும்" என தெரிவித்துள்ளார்.